Sonntag, 15. Mai 2011

பகுதி 3





லவனும், குசனும் விளையாடிக்கொண்டிருக்க, கோகுலன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான்.

'ஹலோ!' என்று குரல் கொடுத்த ஜானகி, பிள்ளைகளைப்பார்த்து, 'இந்த அன்ரி இனி எங்கடை வீட்;டிலைதான் இருக்கப்போகிறா.' என்றாள்.

'அன்ரி, உங்களுக்கு என்ன பெயர்?' என்று  கேட்டான்  லவன்.

'யசோ' என்று சொல்லி, அவன் தலைமுடியை அன்போடு வருடி

விட்டு பக்கத்தில் நின்ற குசனையும் அணைத்தாள்.

'நல்லாத் தமிழ் கதைக்கிறீங்கள்... கெட்டிக்காரப்பிள்ளையள்!'  என்று பாராட்டினாள் யசோ.

'ஜேர்மன்பிள்ளை ஒண்டையெல்லே பாக்கச் சொன்னனான்.' என்றான் கோகுலன்.

ஐானகி பதில் சொல்லவில்லை, யசோவை உட்காரவைத்துவிட்டு, தேனீர் தயாரிக்கச் சமையலறைக்குட் சென்றாள்.

கோகுலன்  தொலைக்காட்சியில், பார்த்த தொடர்ச்சியில் கவனத்தை மீண்டும்  செலுத்தினான்.

யசோவின் கண்கள்; ஒருகணம் அந்த வீட்டைச் சுற்றி வந்தன. அது ஒரு அழகான பெரிய வீடு, கிராமத்தின் மத்தியில் அமைந்திருந்தது. வீட்டின் முன்புறம் பூந்தோட்டம், பின்னால் சிறய புற்தரை. அங்கே உடுப்புக்காய கொடிகளும், ஓய்வுநேரங்களில் உட்கார மேசை, கதிரைகளும் போடப்பட்டிருந்தன.

ஐானகி தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். குடித்துவிட்டு கோகுலன் விடை பெற்றான்.

'ஒண்டவிட்ட தம்பி, எண்டாலும் எங்களிலை உயிரையே வைச்சிருக்கிறான்.' என்றாள் ஐானகி.

'அவருக்கு நான் இங்கை வந்தது பிடிக்கவில்லைப்போலக்கிடக்கு.'

'சீ.... அதொண்டுமில்லை, ஜேர்மன்பிள்ளை எண்டால் நல்லது, பிள்ளையளைப் பாக்கிறதோடை, வீட்டுப்பாடங்கள் செய்யிறதுக்கும், டொச் கதைக்கிறதுக்கும், பொதுவா இருக்கும் எண்டு அவன்ரை எண்ணம். இப்ப இருந்தபிள்ளை நல்ல அருமையான பிள்ளை, அப்பிடி ஒரு பிள்ளையைத்தான் தேடினனாங்கள், நல்ல பிள்ளையள் கிடைக்கிறது கஸ்டம்.' என்றாள் ஐானகி.

'அக்கா! நான் கொஞ்சநாளைக்குப் பிள்ளையளைப் பாக்கிறன், அதுக்குள்ளை வேறை பிள்ளை ஒண்டைப் பாருங்கோ!'

'ம்....ம்..... இப்போதைக்குப் போதும்.' என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் ஐhனகி.

'தம்பி எங்கை இருக்கிறார்?'

'கிட்டத்தான், தனிய இருக்கவேணும் எண்டு இருக்கிறான். சிநேகிதங்கள் கூட, சொன்னாக் கேட்கானாம்.

                     

'தனிய இருக்கேக்கை அநேகமான போய்ஸ் இப்பிடித்தான், பிறகு எல்லாம் சரியாயிடும், இதுக்கேன் அக்கா யோசிக்கிறீங்கள்?' என்று யசோ சொன்னதை மறுத்த ஐhனகி,

'கோகுலன் எல்லாத்திலும் கொஞ்சம் ஓவர், என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.'

'கலியாணம் ஒண்டைப் பேசி செய்திட்டீங்கள் எண்டா திருந்திடுவார்.'

'சம்மதிக்கிறான் இல்லை, காசு மட்டும் நிறைய வைச்சிருக்கிறான். வேலையிலை ஒழுங்கு....' என்றாள் ஐானகி.

அப்போ தொலைபேசிமணி ஒலித்தது. ஐானகி எழுந்து சென்று தொலைபேசியை எடுத்தாள்.

யசோ பிள்ளைகளைப் பார்த்து,

'அப்பா வேலைக்கா....?'

படம் கீறிக்கொண்டிருந்த குசன் யசோவை நிமிர்ந்து பார்த்துவிட்டு,

'அப்பா சாமிட்டைப் போட்டார்..!' என்றான்.

யசோ அதிர்ந்து போனாள். எழுந்து அவனருகிற் சென்று, இரக்கம் சொரியத் தன்பக்கம் அணைத்தாள். அப்போ லவன் எழுந்து வந்து சுவரில் சந்தனமாலையுடன் தொங்கிய படத்தைக் காட்டினான்.

யசோவுக்குக் கூதலோடியது.

ஐானகி இதுபற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லையே...! மலைபோல இந்தக் கவலையை மறைத்து வைத்துக் கொண்டா எனக்குச் சமாதானம் சொல்லவந்தாள்;  என்று நினைக்க அவள் கண்கள் ஈரமாகின.

ஐானகி தொலைபேசி உரையாடலை முடித்துவிட்டு ஹோலுக்குள் வந்தவள்,

'நாளைக்கு வேலைக்குப் போகவேணும்....'

யசோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், ஐானகியின் கணவன் 'ராமின் படத்தைக்  கண்ணீர் சொட்டப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

'ஆறுமாதங்களாச்சு, வேலையாலை வரேக்கை கார் அக்ஸிடன்ற்....' மேலே ஐானகிக்கு வார்த்தைகள் வரவில்லை, விம்மிவிம்மி எழுந்த அழுகையை வெடித்துக்கொட்டாமல், ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு, அடக்கிக் கொண்டாள் ஐானகி.

'சோதனைகள் சிலபேரை அடித்துத் தும்புதும்பாக்கி விடுகின்றன.' என்றாள் யசோ தொண்டையடைக்க.

                     

'மனிசவாழ்க்கை இவளவுதான், ஒவ்வொரு மனிசனும் தன் நேரம் வந்தாப் போகவேண்டியதுதான்.....'

கண்ணீரைத் துடைத்துவிட்டு, மேசையிலிருந்த தேநீர் குடித்த பாத்திரங்களை எடுத்து சமையலறைக்;குக் கொண்டு போனாள். அவளுக்கு உதவ யசோ எழுந்து பின்னால் சென்றாள்.

'கடவுள் இப்படிச் சோதிக்கிறாரே! வெளிநாட்டிலை தனியா பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது எவ்வளவு கஸ்டம்.... பிள்ளையளுக்காக எண்டாலும் நீங்கள் புதியவாழ்க்கை ஒண்டை அமைக்க வேணும்!' மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிட்டாள் யசோ.

ஐானகி திரும்பி அவள் கூற்றை நிராகரிக்கும் பார்வையுடன்,

'நாங்கள் எட்டுவருசங்கள் வாழ்ந்தாலும், எண்பது வருச வாழ்க்கை வாழ்ந்திருக்கிறம். எனக்கோ, இல்லாட்டி பிள்ளையளுக்கோ எண்டு புதுவாழ்க்கை தேடுமளவுக்கு நாங்களில்லை.' என்றாள்.

மேல்வீட்டைப் பார்த்தபடி,

'மேலை ஆர் இருக்கிறது..?' என்று கேட்டாள் யசோ.

'நாங்கள் தான்....'

'வாடை கனக்க வருமே...!'

'எங்கடை சொந்தவீடு.'

'எண்டாலும் அக்கா வேண்டின காசுக்கடன்கள் கட்டுறது எல்லாம் எவ்வளவு கஸ்டம்....? நீங்கள் ஒரு ஆள், பிள்ளையளையும் பார்த்து, வேலைக்குப் போறதெண்டா என்னண்டக்கா...!'

பாத்திரங்களைக் கழுவி அலுமாரிக்குள் வைத்துவிட்டு, சாப்பாட்டு மேசையுடன் இருந்த வாங்கில் இருந்துவிட்டாள் ஐானகி.

எதிரேயிருந்த நாற்காலியில் தானும் உட்கார்ந்தபடி ஐானகியின் கையை ஆதரவோடு தடவினாள்.

'இன்சுரன்ஸிலிருந்து நிறையக்காசு வந்தது. எனக்கு ஒரு கடனும் இல்லை. பதிலா பாங்கிலை எல்லார் பேரிலும் காணக்கூடிய காசு கிடக்கு. பேச்சுக்குச் சொல்லேல்லை... உண்மையாத்தான்.... எல்லா விதத்திலும் மூளையைப்; பாவிச்சு வாழ்ந்தவர், என்னைக்கூட படி...! படி....! எண்டு ஒற்றைக்காலில் நிண்டு படிக்கவைச்சதாலை,                       இண்டைக்கு மற்றவேற்றைக் கையேந்தாமல் என்ரை சொந்தக்; காலிலை நிக்கக்கூடியதாக் கிடக்கு..... பிள்ளையள் இரண்டு பேரையும் படிப்பிச்சுவிட்டால் அவங்கள் தங்களைத்  தாங்கள் பாத்துக்; கொள்;ளுவாங்கள்.'

யசோ வாயடைத்துப் போய்நின்றாள். அழுகான மலருக்கள் அடித்து ஓய்ந்திருந்த புயலை ஐிரணிக்க முடியாதவளாய்த் திணறினாள்.

'எனக்கு அட்வைஸ் சொல்லுறதெண்டு நினைச்சு, கலியாணம் அது இது.... என்று என் மனதைக் குத்தாதை. நாங்கள் நல்லா வாழ்ந்தனாங்கள். ஒண்டிலும் குறை விடேல்லை.....'

'எண்டாலும் இந்த வயதிலைஎன்னண்டு.... என்னைவிட அஞ்சு வயசு தானே அக்கா உங்களுக்குக்கூட....!'

'யசோ! உனக்கு இவ்வளவுதான் எண்டு கடவுள் விதிச்சால் அவ்வளவுதான். கடுகளவும் கூடவும் மாட்டுது, குறையவும் மாட்டுது. 'ராம்..... என்ரை 'ராம் செத்ததாக நான் நினைக்கவேயில்லை. கண்ணுக்கு முன்னுக்கில்லை.... எங்கோ... எங்கோ தூர ஒரு வெளிநாட்டிலை இருக்கிறார் என்றதுபோல நினைப்புத்தான்  என் மனசிலை இருக்கு. அவர் ஒரு மனிசன் யசோ, அப்பிடி ஒரு மனிசனை நீ பாத்திருக்கமாட்டாய். என்ன கொள்கை... கட்டுப்பாடு... திட்டம்...... கனக்க கதைக்காது மனிசன, எல்லாம் செயலிலை காட்டிப்போடும்.'

இமை வரம்புகளை இடித்துக்கொண்டு ஓடியது கண்ணீர்.

யசோ எழுந்து போய் ஐானகியைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். சொந்தச்சகோதரிக்கு வந்த இழப்புப்போன்ற உணர்வுகள் அவள் உள்ளத்தை உருக்கியது.

''ராம்.......' என்று உச்சரித்த யசோ, 'நல்ல பெயர்...' என்றாள்.

'பெயர் மட்டுமில்லை யசோ.... ஆளும்தான். தங்கமான மனுசன். செத்தபிறகு எல்லாரும் சொல்லுறதுபோல வெறும் வார்த்தைகளாக

சொல்லேல்லை..... உண்மையாகச் சொல்லுறன். ஒரு ஈ எறும்புக்குக் கூடத் தீங்கு நினைக்கமாட்டார். என்ன செய்வதெண்டாலும் நல்லா யோசித்து ஆழச்சிந்தித்துத்தான் செய்வார். இந்த வீட்டை வாங்கினார். எனக்கு நெடுகவே இந்த ஆசையிருந்தது. அவருக்குத் தெரியும். கடன்பட்டுத்தான் வாங்கினனாங்கள். பல விசயம் தெரிந்த ஆக்களோடை கதைத்து, விசாரித்து... அப்பிடிச்செய்தா என்ன... இப்பிடிச்செய்தா என்ன என்று எல்லாவழியிலும் யோசிச்சு, தனக்கு   ஏதாலும் எண்டா என்னிலோ, பிள்ளையளிலோ கடன் பொறுக்காது அதுக்கும் இன்சூரன்ஸ் செய்து..... பார்..... இண்டைக்கு அதைச் செய்திராட்டி நானும், பிள்ளையளும்;  என்னசெய்யிறது?

புருஸன் செத்தா இன்னொரு கலியாணம் செய்யக்கூடாதெண்டு நான் சொல்லேல்லை... ஆனால் என்னைமாதிரி வாழ்ந்த ஒருத்திக்கு மறுகல்யாணம் எண்டது நினைச்சும் பார்க்க முடியாததொண்டு.'

'உங்கடை இடத்திலை நான் இருந்தாலும்  இந்த முடிவைத்தான்; எடுப்பன்.'

'அதுதான் உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு.'

'எனக்கும் உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு அக்கா!'

'நாளைக்கு விடிய நான் வேலைக்குப் போக வேணும். பிள்ளை யளை வெளிக்கிடுத்;தி விடுவீர்தானே?'

'ஓம் அக்கா! நீங்கள் போட்டு வாங்கோ, நான் எல்லாம் செய்வன்.' என்ற யசோவுக்கு உடுப்பு அலுமாரியைத் திறந்து நாளைக்குப் போட்டு விடுவதற்கான உடுப்புக்களைக் காட்டினாள்.

'லவன் பள்ளிக்கூடம் தனியப்போவான், குசனைக் கின்டர்காடின் கூட்டிக்கொண்டு போய்விடவேணும்..... கிட்டத்தான்.' என்று ஐானகி கின்டர்காடின் இருக்கும் இடத்தையும், செல்லும் வழியையும் யசோ வுக்குச் சொல்லி வைத்தாள்.

நல்ல பெரிய வீடு, நிறைய அறைகள் இருந்தன. ஒரு பெரிய அறையை ஐானகி யசோவுக்;;;;;;கென்று ஒதுக்கி, அவள் பாக்கை அங்கு வைத்துவிட்டு, வீட்டைச்சுற்றிக் காட்டினாள்.

சொந்தவீடு என்பதிலோ என்னவோ, புதிய தளபாடங்கள் போட்டு, வீடு பளபளவென்று இருந்தது. கீழ்மாடியில் சமையலறை, விசிற்றிங் றூம், பாத்றூம், மற்றோர்அறை பிள்ளைகள் விளையாட, படிக்க, சாமியறை, தட்டுமுட்டுச்சாமான்களுக்கென்று ஒரு அறை என்றும், மேல்வீட்டில் படுக்கையறைகள்.... அங்குதான் யசோவுக்கென ஒதுக்கப்பட்ட அறையும் இருந்தது. அதற்கு மேலுள்ள வீடு உள்வேலைகள் முடியாமல் கதவு பூட்டியிருந்தது. பிள்ளைகள் வளர்ந்த பிறகு தேவைப்படும், அப்போ மிகுதி வேலைகளைச் செய்து முடிக்கலாம் என்று விடப்பட்டிருந்தது.

'ராம் உயிருடன் இல்லையென்ற குறையைத்தவிர, வேறெந்தக் குறையையும் காணமுடியவில்லை. சுத்தம், ஒழுங்கு, நிர்வாகம் எல்லாம் சீராக இருந்தன.

                    

லவனும், குசனும் மற்றப்பிள்ளைகளைப்போல குறும்புத்தனம், விளையாட்டுக்குணங்கள் இருந்தாலும், சொல்வழி கேட்கும் பிள்ளை களாய் கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள்.

மறுநாட்காலை, ஐானகி எழுந்து வேலைக்கு வெளிக்கிடும்போது யசோவும் எழுந்துவிட்டாள்.

'ஏழுமணிவரை படுக்கலாம், நேரம் கிடக்கு, போம்! போய்ப்படும்! றெஸ்ற் ஆக இருக்கும்.' என்று ஐானகி சொல்லியும் யசோ கேட்கவில்லை.

'இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்தே எனக்குப் பாதி வருத்தம் மாறினது போல இருக்கு.' என்றவள் முகத்தைக் கழுவிவிட்டு வந்து தேநீர் வைத்தாள்.

யசோ கொடுத்த தேநீரை அருந்திவிட்டு வேலைக்குப் புறப்பட்ட ஐhனகி,

'கனநாளைக்குப் பிறகு வேலைக்குப் போறன்.... சோட்லீவு எடுக்க மனமில்லை, தம்பியிட்டைச் சொன்னனான், லீவிலை நிக்கிறான், எட்டுமணிக்கு வருவான், உம்மைக் கொஸ்பிற்றலுக்குக் கூட்டிக் கொண்டு போக, ரெடியாக இரும்.' என்று யசோவை அன்போடு தடவிவிட்டு வேலைக்குப் புறப்பட்டாள்.

இவ்வளவு நல்ல பெண்ணுக்கு வாழ்க்கை இப்பிடிப் பாதியிலை அறுந்துபோக ஏன் விட்டாய்; நாராயணா...? என்று யசோவின் மனம்  பொன்னாலையானை நினைத்தது.

கோகுலன் வருவார் என்று  ஐானகி சொல்லிவிட்டுப்;போகிறா, அவருக்கு நான் இந்த வீட்டுக்கு வந்தது பெரிசாப் பிடிக்கேல்லை, இனி ஹொஸ்பிற்றலுக்குக் கூட்டிக்கொண்டு போகச் சொன்னா எப்பிடிச் சினக்கிறாரோ தெரியாது என்று நினைத்தவளாய் சோபாவில் உட்கார்ந்தாள்.

கண்;ணன் ஏன் இப்படி மாறிவிட்டான் என்று அவளுக்குப் புரிய வில்லை. அந்த சில நாட்களில் எத்தனை காதல் வசனங்களை அவன் கக்கியிருப்பான்.... எல்லாம் நுனிநாக்கிலிருந்து வழுக்கி விழுந்த வசனங்களே தவிர, ஒன்றுகூட உள்ளத்திலிருந்து முளைக்க வில்லை... என்று நினைத்தவளாய் எழுந்து போய் வீட்டுவேலை களைச் செய்தாள்.

பள்ளிக்கு நேரம் வர லவனையும், குசனையும் எழுப்பி வெளிக்கிடுத்தி வழியனுப்பிவிட்டு சமையல்; செய்தாள்.

தொலைபேசிமணியடித்தது. ஐானகியாக இருக்குமென்று றிஸீவரை எடுத்து, 'ஹலோ!' என்றாள்.

Keine Kommentare: