கவிதைகள்




ரீன் ஏஜர் நாங்கள்


ரீன் ஏஜர் நாங்கள்
ரீன் ஏஜர் நாங்கள்

ரோஜாக்கள் போல
ரோஜாக்கள் போல

அழகாக ஜொலிப்போம்
அறிவாய்த் திகழ்வோம்

என்றென்றும் ராஜாவாய்
எந்நாளும் வேகமாய்

ஓடி ஓடிப் படித்திடுவோம்
கூடிக் கூடி மகிழ்ந்திடுவோம்

ரீன் ஏஜர் நாங்கள்
ரீன் ஏஜர் நாங்கள்

பள்ளிக்கூடம் போவோம்
பாடங்கூடப் படிப்போம்
புத்தகம் எல்லாம் கொண்டு
பள்ளிக்கூடம் போவோம்

கிழிச்சுவிடாமல்
கீறல்விழாமல்
உறைக்கு மேலே உறையைப் போட்டு
பொண்ணு போலப் பேணிக்கொள்வோம்

படியாத பிள்ளைகள்
மேயாத மாடுகள்
உழைக்காத மனிதர்கள்
கல்லான பிறவிகள்

உலகை நினைத்து உழுது விதைத்து
நாடு வாழ நாமும் வாழ
நன்றாய் வாழ்வோம்
நல்லவர் வாழ்த்த

வேலை இல்லாத திண்டாட்டம்
காலைத் தொட்டு மண்டாட்டம்
மாலையிலே நீராட்டம்
சாலை எல்லாம் ஆர்ப்பாட்டம்
இதுவும் வேணுமா! ! !

வருமுன் காப்பவர் நாங்கள்
பருவத்திலே பயிர் செய்வோம்

படித்தே உயர்வோம்! படித்தே தீர்வோம்!
படித்தே உலகை ஆண்டிடுவோம்
படித்தே உறவைப் பெருக்கிடுவோம்
விட்டதை எல்லாம் மீட்டிடுவோம்
விழுந்ததை எல்லாம்  எடுத்திடுவோம்.