அழகு
என் தாயின் அழகே அழகு
அவள் பொழிந்த அன்பே அழகு
எங்கள் கோயில் முடியும்
அழகு
கோபுர வாசலும் அழகு
இறைவன் அழகும் அழகு
இயற்கை அழகும் அழகு
இரவின் வரவும் அழகு
நிலவின் அழகும் அழகு
ஓடும் முயலும் அழகு
ஆடும் மயிலும் அழகு
காடும் நதியும் அழகு
கூடும் உறவும் அழகு
வீதியின் அழகும் அழகு
சாமியின் அழகும் அழகு
அருள்புரியும் அழகும் அழகு
துள்ளும் குழந்தை அழகு
தூங்கும் போதும் அழகு
பள்ளிக்கனவு அழகு
பட்டம் பெற்றால் அழகு
சின்ன வயது அழகு
சொன்னது எல்லாம் அழகு
பார்த்த பார்வை அழகு
பழக்கம் வந்தால் அழகு
காதல் வந்தால் அழகு
கள்ளப்பார்வை அழகு
துார நின்றாலும் அழகு
தூக்கிச் சென்றாலும் அழகு
சின்ன விளக்குகள் அழகு
சிந்தும் ஒளி வெள்ளம் அழகு
மின்னல் நெளிவும் அழகு
மின்மினியுந்தான் அழகு
ஒழுங்கை நடையும் அழகு
ஒல்லிப் பெண்ணும் அழகு
வேலி மரங்களும் அழகு
பல்லி சொல்வதும் அழகு
கணனி விளையாட்டு அழகு
காது மியூசிக்கும் அழகு
கணக்கா இருந்தால் அழகு
கற்று முன்னேறு அழகு
இறைவன் படைப்பு நல்ல அழகு
உலகம் காண மின்னும்
அழகு
கோபம் இல்லாவிடின் அழகு
காணும் உயிரெல்லாம் அழகு
அன்பு வலைவீசு அழகு
கூடி வாழ்ந்து பார் அழகு!
அன்பு நடமாடும் உலகு
கூடிச் சேர்ந்து நீ பழகு
அச்சம் கோபம் தனை விலக்கு
சேர்ந்து கொண்டாடு அழகு!
இனிமை நிறைந்தது இந்த உலகு
மனிதர் எல்லாம் இதைக் காத்து
அன்பு நதி பாய வைத்து
இன்பம் பொங்க வாழ்வதே
அழகு!
Keine Kommentare:
Kommentar veröffentlichen