Mittwoch, 11. Mai 2011

பகுதி-7






'அப்பிடியெண்டா ஏன் அப்பிடிச் செய்தனீங்கள்...?'

யசோவின் கேள்விக்குக் கண்ணனிடம் பதில் இல்லை.

'நானும் ஒரு மனிதஐன்மம் என்பதை நீங்கள் நினைக்கவில்லை. உங்களோடு வாழ வந்தவள் என்று நீங்கள் நினைக்கவில்லை. தொலைந்து போ! என்று தள்ளிவிட்டீங்கள். நான் தொலைந்து போயிருப்பேன். அந்தப் பொன்னாலையான் இல்லாட்டி...! நான் வணங்கிய தெய்வம் என்னைக் காப்பாற்;றியது. கடவுளே...! நீ இல்லையா என்று கதறி நான் அழுதேன்.. கடவுள் மாதிரித்தான் தாமோதரன்அங்கிள் ஐானகியக்காவைச் சந்திக்க வைத்தார். இண்டைக்குப் பறவாயில்லை, இருக்கிறன். ஆனால் நீங்கள் அண்டைக்குச் செய்தது பிழை.'

'நான் செய்தது பிழைதான்.... ஆனால் உம்;மைக் கலியாணம் செய்து என்னால் சந்தோசமா இருக்க முடியாது.'

'நான் வருத்தக்காரி, ஓ.கே, கலியாணம் செய்ய மறுத்தீங்கள். ஆனால் நான் ஒரு வீடு ஏடுத்துப்போகும் வரை பொறுத்தி ருக்கலாமோ... இல்லையோ...? ஆராவது தெரிஞ்சவர்கள் வீட்டிலை யாவது என்னைக்கொண்டுபோய் விட்டிருக்கலாம்தானே! ஒண்டுமில்லாத சோசல்காம்பிலை கொண்டுபோய் விட்டீங்களே! அதுதான் எனக்குக் கோபம். இப்ப எல்லாம் ஓ.கே.'

தன்னையும் மீறி வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு,
'எனக்கு எந்;தக் கோபமும் இல்லை, நீங்கள் சந்தோசமாக இருங்கோ!' என்றாள் யசோ.
'நீரும் சந்தோசமாக இருக்கு வேணும்.'

'இருப்பன்!'
அப்போ கோகுலன் வரும் சத்தம் கேட்டது.
'தயவு செய்து இவைக்குச் சொல்லிப்போடாதையும்.'

'சொல்லமாட்டன், நீங்கள் பயப்பிட வேண்டாம். உங்கடை கலியாணத்தை இவர்களோடை நானும் நிண்டு நல்லபடியா நடத்தி வைப்பன்.'

அப்போ உள்ளே வந்த கோகுலன்,
'ஹொஸ்பிற்றலுக்கோ...!' எதிர்பாராதது போலக் கேட்டவன்,
'நீங்கள் நிப்பீங்களெண்டு அத்தானை வரச் சொல்லிப்போட்டன்.' என்றான்.
'ரீ போட்டுத் தந்திட்டுப்போறன்!'

'வேண்டாம்..!' என்ற அவன், கண்ணனைப் பார்த்து,
'உங்களுக்கு நேரமிருக்கோ...?' என்று கேட்டான்.

'பிரச்சனையில்லை, இண்டைக்கு நான் லீவிலைதான் நிக்கிறன்.' என்று பதில் சொன்னான் கண்ணன்.

'அப்போ வாங்கோ! ஹொஸ்பிற்றல்லை யசோவை விட்டிட்டு, நாங்கள் கன்ரீனிலை போய் கோப்பி குடிச்சுக்கொண்டு கதைப்பம்.'
கோகுலனின் அழைப்பை மறுக்கமுடியாமல், கண்ணனும் அதற்கு இசைந்தான்.

பின் சீற்றில் இருக்கப்போன யசோவை,
'நீங்கள் முன்னுக்கு இருங்கோவன்...!' கேட்டான் கோகுலன்.

'பறவாயில்லை..' என்று நாகரிகமாக மறுத்தாள் யசோ.

'பின்னுக்கிருந்தால் உங்களுக்கு ஒத்து வராதெல்லே! வாங்கோ...! அத்தான் பின்னுக்கு இருப்பார்.' என்று கோகுலன் கட்டாயப்படுத்த, யசோ முன்னால் ஏறிக்கொண்டாள்.

வைத்தியசாலைக்கு அண்டியுள்ள கார்த்தரிப்பிடத்தில், காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்கள்.

'நீங்கள் கன்ரீனிலை போய் இருங்கோ! நான் யசோவை மேலே கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டு வாறன்.' என்றான் கோகுலன்.

'நான் போவன், நீங்கள் அவரோடை போங்கோ!' என்று தடுக்க முயன்றாள் யசோ.

'முதல் உங்களுக்குச் சுகம் வரட்டும், அதுக்குப் பிறகு நீங்கள் சொல்லுறதைக் கேட்பம், இப்ப வாங்கோ!' என்று கையில் பிடித்துக் கூட்டிச் சென்றான் கோகுலன்.

கண்ணனுக்கு நெஞ்சிலே ஆணியடிப்பதுபோலக் குத்தியது.

                      ----------



யசோவுக்கு வீட்டிலிருந்து கடிதம் வந்திருந்தது, அண்ணன் வரதராசன் மூலம் அவளது நிலமை பெற்றோருக்கும், தம்பி, தங்கைகளுக்கும் தெரியவர, அவர்கள்  அழுகை வடியக் கடிதம் எழுதியிருந்தார்கள்.

நோய் சீக்கிரம் குணமாக வேண்டி விசேட பூiஐகள் செய்து திருநீற்;றுப் பிரசாதமும் கடிதத்தோடு வைத்திருந்தனர். அதைப் பக்தியோடு எடுத்து அவள் தன் உடமைகளுடன் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

'நீங்கள் கண்கலங்குமளவுக்கு எனக்கு ஒன்றும் நடந்துவிடவில்லை, நான் நல்லாயிருக்கிறேன்... ஐானகியக்காவைச் சந்தித்தது கடவுளின் திருவருள் என்றுதான் சொல்ல வேண்டும்... வருத்தத்துக்கு வைத்தியங்கள் செய்கிறார்கள், எல்லாம் சுகம் வரும், நான் Nஐர்மன்மொழி படிக்கிறேன், நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம்.

'நான் உங்கிருந்து பறக்கும்போது கணவனே எல்லாமென்று நினைத்தேன், உங்களைப்பிரிந்து செல்கிறேனென்ற கவலை இருந்தது, கணவன் என்ற புதிய உறவும், பலம்மிக்க பாசமும் என்னைச் சுற்றிப்படரப்போகிறது என்ற ஆவலில் உங்கள் பிரிவு எனக்குப் பெரிதாக அன்று  தெரியவில்லை. பொறுப்பில்லாத ஒருத்தியாக வந்தேன்.... பொறுப்புக்களைச் சுமக்க அண்ணன் இருக்கிறானென்ற துணிவு இருந்தது. இங்கு வந்த பிறகுதான் புரிந்தது.... எதுவும் குழம்பலாமென்று...........

                       
அண்ணை கனடாவுக்குப் போகவேண்டி வந்தது, கணவன் என்று நம்பி வந்தவன் என்னைக் கை உதறி விட்டான். ஆனால் கடவுள் கைவிடவில்லை, நான் சந்தோசமாக இருக்கிறேன், Nஐர்மனியில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. வாழ நினைத்தால் வாழலாம்... என்னைப்பற்றி நீங்கள் கலங்க வேண்டியதில்லை.

என்ன புதினம் தெரியுமா...? எனக்குக் கணவனாக வர இருந்தவருக்குக் கல்யாணமாம், பெண் யார் தெரியுமா? கோகுலனின் தங்கச்சி. அவருக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சயமானதோ, என்னைத்தான் கல்யாணம் செய்ய இருந்தார் என்பதோ ஐhனகியக்கா, கோகுலனவைக்குத் தெரியாது. நல்லது நடக்கட்டும்.'

கடிதத்தை முடித்து உறைக்குள்ளிட்டு தன் பெற்றோரின்; முகவரியை எழுதித் தபாலிற் சேர்த்தாள்.

தனிமையில் இருக்கும் வேளைகளில் கவலைகள் நெஞ்சையிடிக்க 'அம்மா' என்று வாய்விட்டு அழைப்பாள் யசோ.
'எவ்வளவு ஆசைகள், கனவுகளுடன் என்னை வளர்த்திருப்பீங்கள்... எனக்கேன் இப்பிடியொரு நிலை...? நான் யாருக்குமே தீங்கு செய்ய வில்லை... கடவுள் என்னை நோயாளியாக்கிப் போட்டார்... கல்யாண மும் குழம்பிப்போச்சு....
உங்கிருந்தால் உங்கள் மடியில், உங்கள் கரங்களுக்குள் அடைக்கலம் தருவீங்கள். இங்கு  நான் ஒரு அனாதையாக நிற்கிறேன்;.'

கண்ணீர் வழிவதையும் தடுக்காமல், படித்த நாட்கள்... பழகிய நண்பர்கள்  எல்லாரையும் நினைத்தாள்.

விமானத்தில் அவளோடு கூட வந்த பெண், தனது திருமணத்துக்கு அனுப்பியிருந்த அழகிய வர்ண அழைப்பிதழ் அவள் கண்களில் குத்தியது.
'எனக்கு மட்டும் ஏன் இந்த ஏமாற்றம்...?'
'வாழ்க்கையென்றால் இவ்வளவு தானா...?'
'அதிர்ஸ்டமில்லாதவள் நான்!'

யோசனையில் ஜானகி தட்டுப்பட்டாள்;, அவளுக்கு வாழ்க்கையைக் கொடுத்து, விநோதங்களைக்காட்டி, ஆசைகளை வளர்த்துவிட்டு விடுகதையாக்கி வேடிக்கை பார்க்கும் தெய்வத்தின்  விளையாட்டை எப்படிச் சொல்வது...?
அவளும் துரதிஸ்டசாலி...... பாவம்... என்று மனதுக்குள் அழுதாள். நாட்கள் நடந்தன.
                          

லவனின் பிறந்தநாள். ஜானகியுடன் பழகுபவர்கள் சிலர் குடும்பமாக வந்திருந்தார்கள். அவர்களுக்குத் தேனீர், பலகாரம் கொடுத்து உபசரித்து, இரவுச்சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்திருந்தாள்; ஜானகி. அவளுக்கு யசோ பெரிதும் உதவியாக இருந்தாள்.

ஹோலுக்குள் விருந்தினர்கள் பலதரப்பட்ட கதையும், பகிடியுமாக இருந்தார்கள்.

'தாமோதரத்தாற்றை மகள் பரதநாட்டியம்;  பழகிறாவோ?' என்று புதினம் அறியும் ஆவலுடன் கமலம்; வனஜாவைக் கேட்டாள்.

'ஓ! உங்கை எல்லாரும்தானே பழகுகினம், சனத்தக்கு வேறை வேலையில்லை.'

அதைக் கேட்டுக்கொண்டு வந்த பரதன்,
'நீங்கள்;  பரதநாட்டியம்; பழகியிருக்கிறீங்களோ...!' என்று கேட்டான்.

'இல்லை... ஏன்?' கேட்டாள் வனஜா.

'கற்றது கையளவு, கல்லாதது உலகளவு! உங்களுக்குத் தெரியாத ஒண்டைப் பற்;றி ஏன் தேவையில்லாமல் குறை சொல்லுறீங்கள்?'

'இல்லை பரதன்.....!' என்று குறுக்கிட்டான் சேகர்.

'ஊரிலை ஆர் இப்பிடிப் பரதநாட்டியம் பழகிக்கொண்டிருக்கினம்...? பத்துப்பன்னிரெண்டு வயதிலை எங்கை அரங்கேற்றம் நடந்தது...?'

'ஊரிலை பலருக்கும் இந்த வசதி ஏற்படேல்லை... இங்கை அந்த வசதி கிடைச்சிருக்கு... அதோடை இந்தப்; பரதக்கலையை நாங்கள் எங்களுக்காகப்  பயன்படுத்த முடியிறது.

வெளிநாட்டுக்கு வந்த ஆரம்பகாலத்திலை இப்பிடிச் சூழ்நிலையள் இல்லை, தமிழைப் படிக்கவோ, தமிழ்க்கலாச்சாரங்களைத்தெரிந்து கொள்ளவோ பிள்ளையளுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கேல்லை. அப்பிடியே போயிருந்தா எங்கடை வருங்காலச்சந்ததி தமிழ் தெரியாத, தமிழரின் தொன்மை தெரியாத சந்ததியாகத் தான் இருந்திருக்கும். இப்ப பாருங்கோ.... எங்கடை பிள்ளையள் போட்டி போட்டுக்கொண்டு தமிழ் படிக்கினம், பேச்சு, கவிதை எண்டெல்லாம் போட்டிகளில் பங்கெடுக்கினம். இதுக்கெல்லாம் காரணம்; பரதநாட்டியம் போன்ற கலைக்கூடங்கள் வெளிநாட்டில் வளர்ந்தமையும் தான். அதோடை பரதக்கலை இன்றைய காலத் தேவைகளை நினைச்சு, எங்கடை தமிழ்ஆக்களின்ரை பிரச்சனையளை எடுத்துச்  சொல்லுறதுக்குப் பயன்படுகுது.

விடுதலையுணர்வை மக்களுக்கு வெளிப்படுத்தி, புதியபல திருப்பங்களோடை எழுச்சியூட்டும்  நடனங்கள், நாட்டியநாடகங்கள் எண்டெல்லாம் தமிழரின் அவலங்களைப் பிட்டுப் பிட்டுக் காட்டுகினம்.. நீங்கள் இது விளங்காமல் கதைச்சுக்கொண்டு இருக்கிறீங்கள்.....!' என்று பரதன் விளக்கமாகக் கூறினான்.

பரதனின் பதில், வெட்டிப்பேச்சுப் பேசும் இவர்களுக்கு ஒரு நல்ல அடி என்று திருப்திப்பட்டாள் யசோ.

மேலும் பரதன் சொன்னான்.

'பிள்ளையளுக்கு இப்ப நல்ல பெயர்களை வைக்கினம்! ஸ்ரயிலுக்குப் பெயர் வைச்சவை வெட்கித்; தலைகுனியினம்! ஏன்...? தமிழன் விழித்துக்கொண்டான். இனியும் அகதியாகப் போய்விடக் கூடாதெண்டு பெரும்பாடுபடுகிறான்.' என்று உறைக்கும்படி கூறினான் பரதன்.


                    ----------


லவன், குசன் இருவரும்; பள்ளிக்கூடம்.... ரியூசன்.... விளையாட்டு என்று போய்விடுவார்கள்.

யசோ ஜேர்மன்மொழி பயின்று சான்றிதழ்களும் பெற்றிருந்தாள்.

'வேலை ஒன்றுக்குப் போகப் போறீங்களா...?' தமாஸாகக் கேட்டுக் கொண்டு கோகுலன் வந்தான்.

'நாலைந்து மணித்தியாலங்கள் செய்யக்கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ...!' என்றாள்; யசோ.

'இது ஆபீஸ் வேலை உங்;களாலை செய்ய முடியாது.'

'என்னட்டை சோட்கான்ட் ரைப்பிங் படிச்சபிள்ளையள் நல்ல வேலைகள் செய்துகொண்டிருக்கினம்;.. தெரியாதா?'

'தெரியாதே...' தினசரிப்பத்திரிகையில் இருந்ததா...?'

'உங்களுக்குப் பகிடி...! உண்மையாத்தான் சொல்லுறன்... வீட்டிலை இருந்து கடிதம் வந்தது... காசுக்கஸ்;டம்...'

'என்னட்டைக் கேட்டிருக்கலாம்தானே! எவ்வளவு வேணும்...?'

'எவ்வளவு கேட்டாலும் நீங்கள் தருவீங்கள் என்று எனக்குத் தெரியும்.'

'அப்ப கேட்கிறதைவிட்டு, கஸ்டம் வேலைக்குப்; போகவேணும் என்கிறீங்கள்.'

'நானும் என்ரை சொந்தக்காலிலை நிற்க முயற்சிக்கக்கூடாதா...? சோசலிலும், உங்கடை அக்கா தயவிலும் இருப்பது எனக்குச் சங்கடமாக இருக்கு.'

'உங்கடை வருத்தம் குணமடையட்டும், நான் உங்களுக்கு நல்ல மாப்பிள்ளை தேடித்தாறன். என்ரை செலவிலை தான் உங்கடை கல்யாணம், ஓ.கே.'

'றொக்கற் மாதிரிப் பறக்கிறீங்கள்.'

'நான் பறக்கேல்லை, நடக்கக்கூடியதொன்றைத்தான் சொன்னனான்.


                      

'முதலில் நீங்களே சரியாக நடக்கத்தொடங்கவில்லை, பிறகு என்ரை வாழ்க்கை.... அதுவும், கடவுளே என்ன செய்வதென்று தெரியாமற் குழம்பிப்போய் இருப்பதை நீங்கள் சரிப்படுத்திவிடலாம் என்று நினைப்பது நடக்கக்கூடியதொன்றா...?'

'யசோ!' என்ற கோகுலனின் குரலில் சற்றுக்கடுமை கலந்திருந்தது.

'நான் சரியாக நடக்கவில்லை எண்டு யார் சொன்னது...?'

'கோவிக்காதேங்கோ, நீங்கள் என்னிலை எவ்வளவோ அக்கறை காட்டுறீங்கள். அதுதான் நீங்களும் நல்லாயிருக்கவேணுமென்று நான் நினைச்சேன்.'

'நான் நல்லாத்தான் இருக்கிறேன்.... பொறுப்போடு இருக்கிறேன், தங்கச்சி வரப்போகிறாள், கல்யாணம் எல்லாம் என்  செலவுதான்.'

'பொறுப்பில்லாதவர் என்று சொன்னனானே...? சரியாக நடக்கத் தொடங்கவில்லை என்றுதான் சொன்னனான்.'

கோகுலன் பதில் சொல்லவில்லை. யசோ எதனை மனதில் வைத்துக்கொண்டு கதைக்கிறாள் என்பது விளங்கியது.

அற்ககோல், சிகரெட், காட்ஸ்அடி.... அக்கா ஐhனகி,
'வேண்டாம் இந்தப்பழக்கம் மறந்திடடா தம்பி!' என்று சொல்லி நா அலுத்துக் கைவிட்ட அந்த விடயத்தை இவ ஆரம்பிக்கிறா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டபோதும், அவள் வார்த்தைகளை இலகுவில் ஒதுக்கிவிட ஏனோ அவனால் முடியவில்லை. கதையை திசைதிருப்ப அவள் கேட்ட வேலை விடயத்துக்கு வந்தான்.

'உங்களுக்கு வேலை வேணும், எடுத்துத்தாறன்.'

'நான் சொன்னது தப்பென்றால் மன்னிச்சிடுங்கோ! நீங்கள் நல்லாயிருக்க வேணுமெண்ட எண்ணத்தில் என்னையும் அடக்க முடியாமல்; சொல்லிப்போட்டன்.'

'தப்பெண்டு நான் சொல்லேல்லை, முயற்சி செய்யிறன்.' என்று சொன்னவன்,
'அவசரம் நீங்கள் வேலைக்குப் போய்த்தானாக வேணுமோ...? உங்கடை வருத்தம் மாற, படிக்கிற டொச் கோசையும் முடிச்சுக் கொண்டு நல்ல வேலையாப் பாக்கலாம்.'
'இரண்டு மணித்தியாலங்கள் …………… இல்லாட்டி கிழமையிலை இரண்டு நாளைக்காவது ……………. ஏதாவது வேலைக்குப் போகவேணும் போலக் கிடக்கு.... வேலைக்குப் போறது எனக்குக் கஸ்டமெண்டு நீங்கள் நினைக்கிறீங்கள், ஆனால் நான் அதுக்கு எதிர்மாறா நினைக்கிறன். வேலையிலை நாலு பேரைச் சந்திக்கும்போது மனதிலை உற்சாகம் பிறக்குமெல்லே...!'

'இருக்கிற உற்சாகம் பத்தாதென்று இன்னும் புதிசா உற்சாகம் பிறக்கவேணுமெண்டு நீங்கள் ஆசைப்படுகிறீங்களோ...?
இங்கை கனபேர் இருக்கிற உற்சாகத்தையும் சாகடிச்சுப்போட்டு, பாதிப்பொழுதை உறக்கத்துக்கும், மீதிப்பொழுதை சாப்பாடு, சினிமா... விடுப்புக்கதை என்று அள்ளிக் குடுத்திட்டு, ஊரிலை இருக்கிற அம்மாக்கு ஒரு கடிதம் எழுத நேரமில்லையெண்டு கௌரவமாகக் கதைச்சுக் கொண்டிருக்கினம்.... நானும்தான்.'

'கோகுலன்! மனிசனுக்கு உற்;சாகம் மனசுக்குள் ஊற்றாகப் பொங்கிச் சொரிந்தால்தான் வாழ்க்கை வாழ்க்கையாக இருக்கும், இல்லாட்டி மரம் ஒன்று நடமாடுவது போலாகிவிடும்.'

'உங்களோடை கதைக்க முடியாது, எனக்குப் புரியாததையும், புரிய வைச்சு குழப்பிப் போடுவீங்கள். எங்கடை ரெஸ்ரோரன்றிலை வேலை கேட்டிட்டுச் சொல்லுறன். உங்களை மாதிரி ஒரு ஆள் அங்கை வந்து போனாலே வயலுக்குப் புதுவெள்ளம் வந்தது போலைச் செழிப்பா இருக்கும்.'

'இந்த நக்கல்தானே வேண்டாமெண்டுறது...'

'உண்மையைத்தான் சொல்லுறன்.'

'நீங்கள் பெரிய பகிடிக்காரன்!'

'சரியாக நடக்கத்தொடங்காத பகிடிக்காரன்... அப்பிடித்தானே!'

அப்போ ஐhனகி வேலையால் வந்தாள்.

'யசோ வேலைக்குப் போகப்போறாவாம்.' என்று கோகுலன் ஐானகியைப் பார்த்தான்.

'ஏன் யசோ வேலைக்குப் போகக்கூடாதா...?' என்று பதிலைக் கேள்வியாகக் கேட்ட ஐானகி, வேலைக்குக் கொண்டு போன பாக்கை சமையலறையில் வைத்துவிட்டு வந்தாள்.

                      
'றெஸ்றோறன்ற் வேலைக்கு...!' என்று கிண்டலாக யசோவைப் பார்த்தான் கோகுலன்.

'இரண்டு, மூண்டு மணித்தியாலங்கள் வேலைக்குப் போனால் நல்லதெண்டு சொன்னனான், அதைப்போய் பெரிசா அக்காவுக்குச் சொல்லுறீங்கள்.' என்று அவனை முறைத்தாள் யசோ.

'ஏன் யசோ...? டொச் படிச்சிட்டு, ஒரு வேலைகுறிச்சுப் படிச்சா நல்ல வேலை எடுக்கலாம்... அதுக்குள்ளை முதல் வருத்தம் மாறட்டும்..' என்றாள் ஐானகி தன் சொந்தத் தங்கை போன்ற உணர்வுடன்.

'வெளியிலை போனால் மனதுக்கு வித்தியாசமா இருக்குமாம், உற்சாகம் வரும் என்கிறா.'

'அது உண்மைதான்.... மனதுதான் வாழ்க்கையை வழிப்படுத்துகிறது... அது சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இருந்தால்தான் சிந்தனை உதிக்கும்... வாழவேண்டுமென்ற துடிப்பு, ஆர்வம் பிறக்கும்.. இல்லாட்டி செத்தமாடு நடப்பது போலத்தான் இருக்கும்.'

'அவ சொல்லுறா, மரம் ஒண்டு நடமாடுவது போல இருக்குமெண்டு, நீங்கள் சொல்லுறீங்கள் செத்தமாடு நடப்பது போல இருக்கும் எண்டு... ரெண்டுபேரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டையள் போலக் கிடக்கு.'
'இரண்டு பேரும் கடவுளாலை அதிகம் சோதிக்கப்பட்டவர்கள்.' என்றாள் ஐானகி.

'ஓ.கே, இண்டைக்கு முதலாளியிட்டைக் கேக்கிறன்.' என்று கோகுலன் பதில் சொன்னான்.

'டொக்;டர் என்ன சொல்லுறார்;...?' என்று யசோவைப் பார்த்துக் கேட்டாள் ஐானகி.
'கிட்னி கிடைச்சால் உடனே ஒப்பிரேசன் செய்து பொருத்துவம் எண்டு பெரிய டொக்டர் சொல்லியிருக்கிறார்'

'இந்தியாவுக்குப் போய்ப் பார்த்தாலென்ன..? அங்கை போய் வேறை ஆக்களும் செய்திருக்கினம்!' என்றான் கோகுலன்.

'ம்...!' என்று நடக்க முடியாத ஒன்றை நிராகரிக்கும் பாணியில்  தலையசைத்த யசோ,
'என்ரை விசாவுக்கு நான் எப்பிடி இந்தியா போறது...? கேஸ் இன்னும் அரைகுறையிலை கிடக்குது. அதோடை காசுக்கு எங்கை போறது...?' என்றாள்;.

பக்கம் 58                                                   23.07.2012

வெளிநாட்டலுவலகத்திலை போய் டொக்டரின் துண்டைக் குடுத்து, விசயத்தை விளக்கமாச் சொன்னால் ஒரு சான்ஸ் கிடைச்சாலும் கிடைக்கலாம்.' என்றாள் ஐானகி.

'விசா பிரச்சனை இல்லையெண்டா காசுக்கு நான் கரன்ரி!' என்றான் கோகுலன்.

'காசைப்பற்றி யோசிக்காதை! நாங்கள் இருக்கிறம், பாங்க் இருக்கு எத்தினை ஆயிரமும் கடன் எடுக்க முடியும். முதல்லை உன் வருத்தம் மாற வேணும்.' என்றாள் ஐானகி.

யசோவின் உடல் புல்லரித்தது.

'தங்கச்சியின் கலியாணத்துக்கெண்டு சீட்டுக் கட்டிக்கொண்டு வாறன்... அவசரத்துக்கு அதையும் எடுக்கலாம். காசுப்பிரச்சனை இல்லை.' என்று மேலும் உறுதிப்படுத்தினான் கோகுலன்.

யசோவுக்குப் பேச்சு வரவில்லை, யாரோ இருவர்...... பழகி இரு மாதங்கள் தானிருக்கும். இப்படித் தன்னில் அன்பும், அக்கறையும் வைத்திருப்பதைக் கண்டு வாயடைத்துப்போய் நின்றாள்.


-----------------------

மறுநாள்,
'வெளிநாட்டலுவலகத்துக்குப் போனீங்களா...?' கேட்டாள் ஐானகி.

கோகுலனும், யசோவும் வெளிநாட்டலுவலகத்துக்குப் போய் வந்திருந்தார்கள்.

'முதல் எடுத்த உடனே முடியாது என்று விட்டார்கள். பிறகு யசோவைப் பார்த்து,
'எவ்வளவு காலம் இங்கை இருக்கிறாய்?' என்று கேட்டார்கள். யசோ பட்டென்று டொச்சிலை பதில் சொல்ல, இலங்கையில் என்ன செய்தாய்...? Nஐர்மன்மொழி படிக்கிறாயா..? எவ்வளவு காலமாக கிட்னி வருத்தம்...? என்றெல்லாம் கேட்க, யசோ பதில் சொல்ல, பாஸ்போர்ட்டைத் தூக்கிக்கொண்டு போட்டு, கொஞ்சநேரத்தாலை வந்து, தற்காலிகமா ஒரு பாஸ்போர்ட் தரலாமாம், போம் நிரப்பிக் கையெழுத்தும் வைச்சாச்சு, வாறகிழமை படத்தைக் கொண்டு வரட்டாம்.' என்றான் கோகுலன்.

'பிறகென்ன யசோ! கடவுள் ஒரு வழியை மூடிவிட்டிருந்தாலும், இன்னொருவழியைத் திறந்து விட்டிருக்கிறார்.' என்றாள் ஐானகி.


                      
'நீங்கள் நினைக்கிற மாதிரியில்லை அக்கா! பாஸ்போர்ட் வந்தாப் போலை முடிஞ்சிடுமே...? இந்தியாவுக்குப் போய்த் தங்குவது... வைத்தியசாலைச்செலவு... என்னிடம் ஒருசதமும் இல்லாத நிலையில்; அக்கா பிளீஸ்! வேண்டாம்... நடக்க வேண்டிய தங்கச்சியின் கலியாணத்தையும் என்னாலை பிற்போட நினைக்காதேங்கோ! என்றாள்.

கோகுலன் குறுக்கிட்டான்.

'கல்யாணத்தைப் பிற்போடுறதெண்டு நாங்கள் சொல்லேல்லை, சீதனக்காசைப் பிறகு குடுக்கலாம். அத்தானுக்கு விசயத்தைச் சொன்னா அவர் கேட்பர். இல்லாட்டிலும் பறவாயில்லை, என்னட்டை வேறை காசு கிடக்கு!

ஐானகி சொன்னாள்.

'முதலிலை உன்ரை வருத்தம் மாறவேணும்... அதுக்குப் பிறகு நீ உழைச்சு முடிந்தால் திருப்பித்தாஇதுக்குப் போய் பெரிசா யோசிக்காதை!'

யசோவின் கண்கள் கலங்கி கண்ணீர் துளித்தது.

'ஏன் அழுகிறீங்கள் யசோ?' என்றான் கோகுலன்.

'சீ! என்ன குழந்தைப்பிள்ளை மாதிரி அழுகிறாய்..? நாங்கள் எல்லாம் இருக்கிறம்... கடவுள் இருக்கிறார்... பிறகென்ன..?' என்று ஐானகி அவள் அழுகையைத் துடைத்தாள்.

'எனக்கேன் இந்தச் சோதனை...? ஊரிலை இருந்திருந்தால் இப்பிடி வருத்தம் எனக்கேன் வருகுது...?' என்றாள்.

'பைத்தியம் மாதிரிக் கதைக்கிறீர்... ஊரிலை இருக்கிற சனங்களுக்கு வருத்தம் வாறேல்லையா?'

'இப்பிடி வைத்தியவசதிகள் அங்கையில்லை, கெதியிலை கண்டு பிடிப்பதும் கடினம்.... இங்கை ஆரம்பத்திலையே கண்டுபிடிக்கக் கூடிய வைத்தியமுறைகள் இருப்பதாலை குணப்படுத்திவிடுவினம்.'

'வருத்தம், துன்பம் எங்கையிருந்தாலும் வரும். இதுக்கு நாட்டையோ கடவுளையோ நொந்து பிரியோசனமில்லை. இருக்கிற சான்ஸைப் பயன்படுத்தி நல்லது நடக்கிறதுக்கு முயற்சி எடுக்கிறதை விட்டிட்டு அழுகிறீர்...?'

'சோசல் காம்பிலையிருந்து கூட்டிக்கொண்டு வந்து, உங்கடை வீட்டிலை பதிஞ்சு, இப்பிடி வசதியா இருக்க விட்டதே நீங்கள் செய்த பெரிய உதவி, இனியும் உங்களை நான் கஸ்டப்படுத்துவது எப்பிடி... ? வேண்டாம் பிளீஸ்! இந்த முயற்சி வேண்டாம்;!'

ஐானகி சற்றுக் கோபம் வார்த்தைகளில் தெறிக்கச் சொன்னாள்.

'அப்ப உனக்கு வாழ விருப்பமேயில்லையா...? உன்ரை தங்கச்சி தம்பிக்கு உதவி செய்யிற எண்ணம் ஒண்டுமில்லையா..? உனக்கு ஒண்டெண்டா உன் அம்மா, அப்பா தாங்கிக் கொள்வார்களா..?'

'சாகிறது எல்லோரும்தானே! ஆனால் சாகும்வரை வாழ்வுக்காகப் போராடவேண்டும்... போராடித்தானாக வேண்டும். சோர்ந்து போனால் பிறப்புக்கே அர்த்தம் காணமுடியாது.'

'எங்கடை உதவியாலை உன் வருத்தம் குணமாகுமாக இருந்தால் எங்கள் வாழ்வுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதுமாதிரி நீ குணமாகி உன் வீட்டுக்காரருக்கோ, வேறு யாருக்குமோ உதவி செய்தால் உன் வாழ்வுக்கும் ஒரு அர்த்தமிருக்குமல்லவா!'

யசோ யோசித்தாள். ஐானகியினதும், கோகுலனதும் அடுத்தடுத்த அழுத்தங்கள்  அவளை இந்தியா செல்ல இசைய வைத்தது.

பாஸ்போர்ட் வந்ததும், இந்தியா சென்று சிகிட்சை பெற அவள் தயாரானாள்.

தொலைபேசி மணியடித்தது. கோகுலனின் தங்கை வேணி கொழும்பிலிருந்து கதைத்தாள். 'விசா கிடைத்துவிட்டது. ரிக்கற் .கே பண்ணப் போகிறோம்.' என்றாள்.

'எம்பஸி இவ்வளவு கெதியா விசாக் கொடுத்துவிட்டது' ஆச்சரிய மும், அதேநேரம் தங்கச்சி வரப்போகிறாளென்ற ஆனந்தமும் கோகுலனது நெஞ்சில் ஆரவாரித்தன.

ஐனகியும், யசோவும் அவன் சந்தோசத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.

அப்போ வீட்டுமணி ஒலித்தது. கோகுலன் கதவைத் திறந்தான். அங்கே கண்ணன் நின்றான்.

'வாங்கோ!' என்று வாய் நிறைய அழைத்து வரவேற்றான்.

                      

வேணி, தனக்கு விசாக் கிடைத்திருக்கிற விடயத்தை கண்ணனுக்கும் தொலைபேசியில் சொல்லியிருந்தாள்.

யசோ தேநீர் போட எழுந்து சென்றாள்.

கண்ணனின் முகத்தில் களையிருக்கவில்லை.

'என்னத்தான் யோசிக்கிறீங்கள்...?' கேட்டான் கோகுலன்;.

'ஒண்டுமில்லை!' என்று சமாளித்துவிட்டு, அமைதியாக இருந்தான் கண்ணன்.

'ஏதாவது பிரச்சனையா...?' என்று கேட்டு, அவன் மௌனத்தைக் கலைக்க முயன்றான் கோகுலன்.

'வேணி ரெலிபோனில் வேறை ஒண்டும் சொல்லேல்லையோ...?'

'இல்லை' என்றாள் ஐானகி.

'விசா கிடைத்துவிட்டது, ரிக்கற் .கே பண்ண இருப்பதாகச் சொன்னாள்.' என்றான் கோகுலன்.

யசோ தேநீரோடு வந்தவள், எல்லோருக்கும் கொடுத்துவிட்டு,
'நீங்கள் கதைச்சுக்கொண்டு இருங்கோ! நான் லவனையும், குசனையும் அவை விளையாடப் போன இடத்துக்குப் போய்ப் பார்த்திட்டு வாறன்.' என்று புறப்பட்டாள்.


'அவங்கள் நின்று விளையாடட்டும், நீர் இங்கை இரும்.' என்று தடுத்துவிட்டாள் ஐனகி.
யசோவுக்கு அங்கே இருப்பது நாகரிகமில்லை என்றுபட்டது. அவர்கள் குடும்பவிடயம் கதைக்கும்போது, அதைக் கேட்பதில் ஆர்வமிருக்கவில்லை. போதாதற்கு எதிரே மாப்பிள்ளையாக..., அந்த வீட்டுக்கு வர இருப்பவன் ஏற்கனவே அவள் மாப்பிள்ளையெண்டு அவளுக்கு அறிமுகமானவன்.

அவள் மனதுக்குள் அவன் இல்லை, ஆயினும் அவனுக்கு முன் அநாவசியமாக நிற்பது அவளுக்குச் சங்கடமாக இருந்தது.

'நீங்கள் கதையுங்கோ! நான் டக் என்று திரும்பிவாறன்.' என்று எழ முயன்றாள்.

                       

'நல்ல விசயம் ஒன்று கதைக்கக் கூடியிருக்கிறம், அதைத் தெரிஞ்சு கொண்டும் பங்கெடுக்காமல் போக நினைப்பது உங்களுக்கு இதிலை இன்றஸ்ற் இல்லையெண்டதுதானே!' என்று கோகுலன் ஒரு போடு போட்டான். யசோ அதை மீறி அப்பால் போகமாட்டாள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.

ஐானகிக்குப் பக்கத்தில் வேறுவழியின்றி உட்கார்ந்தாள் யசோ.

'தங்கச்சி உங்களுக்கு ஏதாவது சொன்னவளா...?'

'ம்!' என்றான் கண்ணன்.

'என்ன சொன்னவள்...?'

'சீதனக்காசு தந்திட்டினமா என்று கேட்டவ...!'

'ஆர் வேணியோ...?' ஐானகி குறுக்கிட்டாள்.

யசோவுக்குத் திக்கென்றது. யார் யாரிடம் சீதனம் கேட்பது...? வெட்கமில்லாமல் அண்ணனிட்டை தங்கச்சி, 'சீதனம் வாங்குங்கோ!' என்று மாப்பிள்ளையா வரப் போகிறவரை அனுப்பியிருக்கிறாளே..! இல்லாட்டி இது கண்ணனின் சுத்துமாத்தாயும் இருக்கலாம்.

கண்ணன் மேலும் சொன்னான்.

'ஐானகியக்கா மாதிரி வீடு ஒன்றை வாங்க ஒழுங்கு செய்யட்டாம், வாடகை வீட்டிலிருந்து தனக்குப் பழக்கமில்லையாம்!'

அவன் சொன்னவை மற்றவர்களுக்குக் குண்டு வெடித்துபோல இருந்தது. ஐானகி சமாளித்துக்கொண்டு,

'அவள் இப்பிடித்தான், அவசரக்குடுக்கை... இஞ்சத்தை நிலைமை தெரியாமல் ஏதோ உளறியிருக்கிறாள், நீங்கள் ஒண்டும் பெரிசா யோசிக்காதேங்கோ! என்றாள்.

'நான் சொன்னபடி சீதனம் கல்யாணத்துக்கு முதல் உங்கடை கையிலை தருவன், கலியாணச்செலவு என்னுடையதெண்டு சொன்னனான், அதைச் செய்வன், வீடு வாங்குவது.... கலியாணம் முடிஞ்சபிறகு நீங்கள் இரண்டுபேரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியது.' என்றான் கோகுலன்.


                           



'என்ன நினைக்கிறீங்களோ தெரியாது...! உங்கடை தங்கச்சி சொன்னதைத் தான் நான் உங்களிட்டைச் சொன்னனான். என்னை நீங்கள் தவறாக நினைக்கக்கூடாது.' என்று கண்ணன் சொல்ல,

'சீ...சீ... அதொன்றுமில்லை! நான் நாளைக்கு அவளோடை கதைக்கிறன்.' என்றான் கோகுலன்.

தேநீர் குடித்தபின், வீட்டுக்குச் செல்ல எழுந்த கண்ணனை,
'சாப்பிட்டுப் போகலாம்!' என்று ஐானகியும், கோகுலனும் மறிக்க, அவனும் இசைந்தான்.

ஐானகியும், யசோவும் சமையலறைக்குச் செல்ல, கோகுலன் தொலைக்காட்சியை இயக்கிவிட்டு,
'றேடியோ கேக்கப்போறீங்களா...?' என்று கேட்க,
'போடுங்கோ!' என்று கண்ணன் சொல்ல, தொலைக்காட்சியை நிற்பாட்டி, வானொலியின் பொத்தான்களை முறுக்கிவிட்டான் கோகுலன்.

                         ----------





Keine Kommentare: