அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை!
ஜானகிக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தினர், அவள் வீட்டுக்கு வந்திருந்தனர்.
'ராம் உயிருடன் இருக்கும்போதே பழக்கமானவர்கள். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகள் அவர்களுக்கு!
மத்தியானச்சாப்பாடு சமைத்து அவர்களை ஜானகி உபசரித்தாள். யசோவும் உதவி புரிந்தாள்;.
அவர்களின் பிள்ளைகள் அழகாயும், சுறுசுறுப்பாயும் இருந்தார்கள். ஆனால் தமிழ் கதைக்காமல் ஜேர்மன்மொழியில் கதைத்தார்கள்.
'தமிழைக் கதையுங்கோவன்!' சொன்னாள் யசோ.
அதற்குத் தாயார் வனஜா, 'அவைக்குத் தமிழ் தெரியாது!' என்றாள் பெருமையாக.
ஜானகிக்;கு அவர்களைப் பற்றித் தெரியும். பேசாமல் தன் வேலையில் இருந்தாள்.
தன் பிள்ளைக்குத் தமிழ் தெரியாது என்று பெருமையாகச் சொல்லும் தாயைப்; பார்க்க யசோவுக்குப் பரிதாபமாக இருந்தது.
'தமிழ்ப்பள்ளிக்கூடம் போறேல்லையோ....?' கேட்டாள் யசோ.
'சீ...!' என்றார் தகப்பன் சேகர்.
'நேரமில்லை.... மாஸ்டர் சொன்னவர் பிள்ளையளுக்கு ஓய்வு தேவை எண்டு!'
'தாய்மொழியைப் படிக்கிறதுக்குத் தினமும் சிலமணிநேரம் ஒதுக்குவது அப்பிடியொண்டும் இடைஞ்சலா இருக்குமெண்டு நான் நினைக்கேல்லை. இஞ்சை இவங்களும் படிக்கிறாங்கள்;... எல்லாத்திலையும் கெட்டிக்காரன்களாத் தான் இருக்கிறாங்கள்!' என்றாள் யசோ லவன், குசனைக் காட்டி.
'நீர் இப்பதானே புதிசா வந்தனீர்! உமக்கு இது விளங்காது!' என்றார் அந்தப் பிள்ளைகளின் தகப்பனார்.
'தமிழ்ப்பிள்ளைகள் தமிழ் படிக்க வேணுமெண்டு சொல்லுறதுக்கு, ஜேர்மனியில் கனகாலம் இருக்கவேணுமெண்ட தேவையில்லையே!' என்று குறுக்கிட்டாள் ஜானகி.
'இஞ்சை பிள்ளையளுக்குரிய கஸ்டங்கள் புதுசா வந்த யசோவுக்குத் தெரியாது, அதுதான் சொல்லுறார்.' என்றாள் வனஜா.
'எனக்குத் தெரியுமக்கா! பல கஸ்டங்கள் பிள்ளையளுக்கு இருக்குத்தான்... பள்ளிக்கூடப் படிப்பைவிட, என்னென்னவோ எல்லாம் படிப்பிக்கவேணும் எண்டு ஓடித்திரியிறாங்கள். அது பிள்ளையளுக்குப் பறவாயில்லையோ...! தமிழ்மொழி அக்கா... இது எங்கடை அப்பு, அம்மா வழிவந்த அன்னைமொழி.... இது தெரியாமல் நாங்கள் பிள்ளையளை வளர்த்தால்.... எங்கடை தமிழ்மொழியின்ரை நிலை என்னெண்டு யோசிச்சுப் பாருங்கோ!'
'இங்கிலிஸ் படிச்சாலும் பறவாயில்லை... உதவும், தமிழ் படிச்சா பிள்ளையளின்ரை நேரம்தான் வீணாகும்.' என்றான் சேகர்.
'அண்ணை! இப்பிடி வேறை எங்கையும் கதைச்சுப்போடாதேங்கோ!
'இதயம் உறுதியாக இருந்தால் சுண்டெலிகூட யானையைத் தூக்கும்! என்ன இருந்தாலும் எங்கடை தாய்மொழியை விட்டுக் குடுக்கக்கூடாது. நாங்கள் தான் எங்கடை பிள்ளையளுக்கு இதை விளங்கப்படுத்திச் சொல்லி, தமிழைப் பேச, வாசிக்க வைச்சு நாலு வரியாவது எழுதக்கூடியவர்களாக ஆக்க வேணும்;!' என்று சூடாகக் கொடுத்தாள் யசோ.
சிலநாட்களின் பின்,
ஒருநாள் வழக்கம் போல எல்லா நிகழ்வுகளும் நடந்தன. யசோ வைத்தியசாலைக்கு அன்று போகவேண்டியதில்லையென்பதால் ஓய்வு எடுத்தெடுத்து வீட்டுவேலைகளையும் செய்து, சமையலையும் முடித்திருந்தாள். அப்போ அங்கே கோகுலன் வந்தான்.
'சுகமாக இருக்கிறீங்களா...?'
'பறவாயில்லை... நீங்கள் எப்பிடி...?'
'இருக்கிறன், கலியாணம் பேசுப்படுகுது, அக்கா சொல்லேல்லையே?'
'சொன்னவ, சந்தோசமான விசயம்தானே.' என்று யசோ மகிழ்ச்சியுடன்; பதில் சொல்ல, கோகுலன் பேஸிற்குள்ளிருந்து படம் ஒன்றை எடுத்துக்காட்டினான்.
'ஏ.எல் படித்திட்டு, ஆபீஸ் ஒன்றிலை வேலை செய்யிறா.'
'வடிவான பிள்ளை, குணநடையிலும் நல்லா இருப்பா எண்டு முகம் சொல்லுது, ஓம் எண்டு சொல்லுறதுதானே.'
'மாட்டன் எண்டு சொல்லேல்லை, கொழும்பிலை தமக்கையின்ரை வீட்டிலை வந்து நிக்கிறா. ரெலிபோனிலை கதைத்தனான்.'
'இவ்வளவு நெருங்கிவிட்டீங்களெண்டு அக்கா சொல்லேல்லை..!'
'இண்டைக்குத்தான் விடிய எடுத்தனான், அக்காவுக்குத் தெரியாது.
அதோடை எங்கடை தங்கச்சிக்கும் சரிவரும்போலை கிடக்கு, மாப்பிள்ளை இங்கை கிட்டத்ததான் இருக்கிறார்.' என்ற கோகுலன், இன்னோர் படத்தையும் அவளிடம் நீட்டினான். உற்சாகமாக வாங்கிக் கண்களை அதில் பாய்ச்சியவள் , அதிர்ச்சியில் வாயடைத்துப்போய் நின்றாள். அவள் தலை சுற்றியது.
'எப்பிடி மாப்பிள்ளை...?' கேட்டான் கோகுலன்.
யசோ பதில் சொல்லாமல் படத்தை அவனிடம் திருப்பிக் கொடுத்தாள்.
'படிச்;;;;சவராம், இங்கை பக்ரறி ஒன்றிலை வேலை செய்யிறாராம், ஆள் எப்பிடி உங்களுக்குப் பிடிச்சிருக்கா?'
யசோவுக்கு என்ன செய்வதென்றே தெரியவல்லை..... இவ்வளவு கெதியா இன்னொரு கலியாணத்துக்கு கண்ணன் காலடி எடுத்து வைப்பானென்று அவள் கனவிலும்கூட நினைத்துப் பார்க்கவில்லை. நெஞ்சு பற்றி எரிந்தது.
நடந்ததை அவனிடம் சொல்லவென்று வார்த்தைகள் தொண்டைவரை வந்துவிட்டபோதும், சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
யசோ பதில் பேசாமல் இருப்பதைக் கண்ட கோகுலன், அவள் அபிப்பிராயத்தையறிய மீண்டும் ஒருமுறை,
'என்ன அமைதியா விட்டீங்கள்...? பிடிக்கேல்லையோ... இல்லாட்டி வடிவில்லையோ...?' என்று யசோவைப் பார்த்துக் கேட்டான்.
அவள் தன் மௌனத்தைக் கிழித்துஇ பொய்யாகஇ 'வடிவா இருக்கிறார்.' என்றாள்.
'ஊரிலை நல்ல வசதியான ஆக்கள்... சகோதரங்கள் எல்லாரும் கைலெவல்லை இருக்கினம்.'
'வசதியானவையெண்டா நல்லதுதானே!' என்று சமாளித்தாள் யசோ. தன்னுடைய இயலாமையை அவள் மனம் ஏற்றுக்கொண்டது. வாழ்நாள்; பூராவும் டாக்டர்இ மருந்து என்றிருக்க வேண்டியவள் அவள். தன்னை மணந்து சந்தோசமாக இருக்க முடியாது என்று அவன் நினைத்ததில் தவறில்லையென்று அவள் மனம் சொல்லியது. கண்ணனோ வாழ்க்கையைப் பற்றிப் பெரிதாகக் கற்பனை செய்து கொண்டிருப்பவன்.
'வீடு வாங்க வேணும்இ பிள்ளைகள் பெற வேண்டும்இ வாறவளும் வேலைக்குப் போக வேண்டும்இ இருவரும் உழைத்து நிறையச் சேமிக்க வேண்டும்.' என்று பல இலட்சியங்கள் அவனுக்கு.
வருத்தக்காரியான தன்னை ஒரு சுமை என்று அவன் நினைத்தது மனிதஇயல்புதானே! என்று மனதுக்குள் சமாதானம் சொன்னாள்.
யசோவின் திடீர் அமைதிக்குக் காரணம் தெரியாத கோகுலன்இ கல்யாணவயதிலே அவளும் இருப்பதால் தனது எதிர்காலம் பற்றி யோசிக்கிறாளோ என நினைத்தவனாய்இ
'நல்ல மாப்பிள்ளையா பார்த்து உங்களுக்கும் கெதியிலை நான் கலியாணம் செய்து வைக்கிறன்இ யோசிக்காதேங்கோ!' என்றான்.
அவளுக்குச் சிரிப்பு வந்தது. எனினும் அப்படிச் சொன்னதுஇ அவள் எரியும் நெஞ்சைக் குளிர்மைப்படுத்துவதாக இருந்தது.
'நான்தானே வருத்தத்தைக் கட்டியிருக்கிறன். இனி ஏன் எனக்குக் கல்யாணத்தை...?' என்றாள்.
'வருத்தம் வாறது எல்லாருக்கும்தான். நீங்கள் அதை ஏன் சீரியஸா எடுக்கிறீங்கள்...?'
'சீரியஸான விசயம்தானே! அப்பிடி எடாமல் வேறை எப்படி எடுக்கிறது?'
'உங்கடை நிலைமை எனக்கு விளங்குது. அத்தான் மோசம் போன போது அக்கா பட்டபாடு வார்த்ததைகளால் வர்ணிக்க முடியாது. அம்மாடி....! இண்டைக்கு அவ தன் மனதை ஒரு மாதிரி வழிக்குக் கொண்டு வந்துஇ பிள்ளையளின் வாழ்க்கைதான் தன் வாழ்க்கை என்று வாழுறா! அதுதான் உங்களுக்கும் சொல்லுறன்
இண்டைக்கு இருக்கிற சோகம் நாளைக்கு இருக்குமெண்டு சொல்ல முடியாது.'
யசோ பதில் சொல்லாதுஇ புன்சிரிப்பு இதழ்களில் தெரிய அவனைப் பார்த்தாள். தன் கவலைகளைப் போக்க அவன் முயற்சிப்பது அவள் மனதுக்கு இதமாக இருந்தது.
தன்னந்தனியாக சோசல் வீட்டில் இருந்தபோதுஇ அவளைச் சோகங்கள் விழுங்கி ஏப்பம் விட இருந்தன.
பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல் வருத்தம் என்று அவள் கலங்கி நின்றபோதுஇ கை பிடித்தவனும் காலை வாரிவிடஇ நெஞ்சம் வேதனையால் வெடித்துவிட்டதுபோல துடித்துப் போயிருந்தவளுக்கு ஐானகியைக் கண்டபின்இ வீட்டுக்கு வீடு வாசற்படி என்று உணரத் தலைப்பட்டாள்.
அப்போ தொலைபேசி மணி ஒலித்தது. எழுந்து சென்று எடுத்த கோகுலன்இ
'உங்களுக்குத்தான்!' என்று யசோவை அழைத்து றிசீவரைக் கொடுத்தான்.
கனடாவிலிருந்து அவள் அண்ணன் வரதராசனின் குரல் ஒலித்தது.
'தங்கச்சி..! என்னடி? என்ன...! தாமோதரன் என்னவோ எல்லாம் சொல்லுறான். கண்ணனுக்கு ரெலிபொன் எடுத்தால் அவனைப் பிடிக்க முடியேல்லை.'
யசோவுக்கு அண்ணனின் குரலைக் கேட்டதும் கண்ணீர் கொப்பளித்துக்கொண்டு வந்தது.
'அண்ணை!' என்று அழைத்தவள்இ விக்கிவிக்கி அழுதாள்.
'அழாதை! நாங்கள் உங்கை இருந்திருக்கலாம்இ இல்லாட்டி லண்டனுக்கப் போயிருக்கலாம். கனகாசும் செலவழிஞ்சு போச்சு! இவன் கண்ணன் இப்பிடிச் செய்வானெண்டு நான் எதிர்பார்க்கவும் இல்லை.'
'எல்லாம் என்ரை விதி அண்ணை! இல்லாட்டி இப்பிடியொரு வருத்தம் இவ்வளவு நாளுமில்லாமல் ஏன் இப்ப வரவேணும்....? ஊரிலை எண்டா அம்மாவின்ரை மடியிலை கிடந்து செத்தாலும் மனதுக்கு நிம்மதியா இருக்கும்.'
'நான் பிழை விட்டிட்டன். சரிஇ நான் உங்கை வாறன். உன்னை இந்த நிலையிலை விட்டிட்டு வந்தது என்ரை பிழை.'
'இல்லை அண்ணை! நீங்கள் இங்கை வந்து என்ன செய்யப் போறீங்கள்? எங்களுக்கு எல்லாப் பக்கத்தாலும் கஸ்டகாலம்!'
'அண்ணி கனடாவிலை நிக்கட்டும்இ நான் வாறன்.!'
'உங்களுக்கென்ன விசரே...? அண்ணை பேய்வேலை பாக்காதேங்கோ! இங்கை வந்து உங்கடை வாழ்க்கையையும் வீணடிக்காமல் பொறுமையா இருங்கோ!'
'என்னடி பொறுமையா இருக்கிறது...? உங்கை வந்து அவன்ரை செவிட்டாவடியிலை ரெண்டு குடுக்க வேணும்போலை கிடக்கு! பொறு.... இந்தா அண்ணியோடை கதை!'
யசோவும் அழுதகுரலில் அண்ணி சாந்தாவுடன் கதைத்துவிட்டு தொலைபேசியை வைத்தாள்.
இதுவரை எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த கோகுலன்இ
'அண்ணைக்கு இப்பதான் தெரியும்போலை கிடக்கு!' என்று கேட்டான்.
'நான் சொல்லேல்லைஇ அண்ணை சரியாக் கவலைப்படுவர்இ அவரும் பாவம்... இங்கை விசா கிடைக்காமல் இருந்தவர். பிடிச்சு அனுப்பினாலும் எண்ட பயத்திலை இப்ப கனடாவுக்குப் போயிருக்கினம்.... அங்கையும்; இன்னும் ஒண்டும் சரிவரேல்லை.'
'எல்லாம் சோகமான கதையாக்கிடக்கு!' என்ற கோகுலன்இ அவள் மனதை வேறு திசைக்கு மாற்ற றேடியோவை இயக்கினான்.
அதில் 'தோல்வி நிலையென நினைத்தால்.....' என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
ஒருநாள் ஜானகி வீட்டுக்கு பரதனும், அவன் நண்பனும் வந்தார்கள். அவர்களை ஹோலுக்கு அழைத்து வந்தாள் ஜானகி. அங்கே கோகுலன் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். யசோ லவனுக்கும் குசனுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
'வாங்கோ!' என்று கோகுலனும், யசோவும் அவர்களை வரவேற்றார்கள்.
யசோவுக்கு அவர்களை யார் என்று தெரியாது.
'என்ன பரதனண்ணை... கனகாலம் காணேல்லை.' என்று கோகுலன் கேட்க,
'இவரா பரதன்....?' என்று இதுவரை அறிமுகமாகாத பரதனை இன்று சந்திக்கிறோம் என்ற மகிழ்வு யசோவின் மனதுக்குள் நிறைந்தது.
அவன் எழுச்சிக் கவிதைகளை வானொலியில் அவள் அடிக்கடி கேட்டிருக்கிறாள். வரிக்குவரி அழகும் துடிப்பும் என்று உயிரோட்டமாக இருக்கும்.
பரதன் சற்று உயரமாய், கம்பீரமான தோற்றம் கொண்டவன். மெல்லிய மீசை... கண்களில் ஒரு வசீகரம்... வார்த்தைகளில் அழகு. இவை அவனுக்கேயுரியவை!
பரதனுடன் கூட வந்தவர் ஊரில் ஊனமுற்றோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் சேகரிக்கும் உயர்ந்த பணியில் ஈடுபட்டிருப்பவர். அவருக்கு உதவியாக பரதனும் நேரம் கிடைக்கும் வேளையில் சேர்ந்து செல்வான்.
ஜானகி தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
'தமிழ் படிக்கிறீங்களோ...?' பரதனின் நண்பன் லவனையும், குசனையும் பார்த்துக் கேட்டார்.
'ஓம்!' என்றார்கள் இருவரும்.
'பாட்டுப் படிப்பீங்களா...?' கேட்டான் பரதன்.
'ஓ! படிப்பம்;!'
'எங்கை ஒரு பாட்டுப் படியுங்கோ பாப்பம்!'
மிக இனிமையாகப் பல பாடல்களை இசைத்தார்கள், மயிர்க்கூச்செறிந்தது.
அவர்கள் பாடி முடித்து அப்பாற் செல்ல, பரதன் சொன்னான்,
'எல்லா வீட்டையும் போட்டு வாறம்!'
'எனக்கு உங்களைப் பாக்கச் சந்தோசமாக இருக்கு! இவ்வளவு நல்ல சேவையைச் செய்யிறீங்கள்... உங்கடை கஸ்டத்தையும் பாக்காமல், இப்பிடி வீடுவீடாய்ப் போய் கஸ்டப்படுகிறீங்கள்.... இரண்டாயிரமும் பிறந்திட்டுது... என்றாள் யசோ.
'உங்களைப் பாக்க எங்களுக்கும் சந்தோசமா இருக்கு! உங்களை மாதிரி ஒவ்வொருத்தரும் எங்களோடை ஒத்துழைச்சு, தேவையை விளங்கிக் கொண்டால் விடியலுக்கு வெகுதூரம் ஆகாது!' என்று பரதன் சொன்னான்.
ஜானகியும், கோகுலனும், யசோவும் தங்கள் பங்களிப்பை மனமுவந்து வழங்கினார்கள்.
பரதனும், நண்பனும் எழுந்து விடைபெற்றுச் செல்ல,
'மெல்லத் தமிழ் இனிக்கும' என்ற வரிகளை உச்சரித்தாள் யசோ.
அவர்கள் சென்றபின் பரதனைப் பற்;றி விசாரித்தாள் யசோ. அப்போ ஜானகியும், கோகுலனும் சுருக்கமாக அவன் நிலைமையை எடுத்துக் கூறினர்;.
Keine Kommentare:
Kommentar veröffentlichen